ராமநாதபுரத்தில் அப்துல்லா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக அப்துல்லாவை காரில் கடத்தி சென்ற மர்ம நபர்கள் அவரை கொலை செய்து கடலில் வீசி உள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்த கொலையை செய்த 3 இளைஞர்கள் நேற்று முன்தினம் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.

இதையடுத்து காவல்துறையினர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். அப்போது நீதிமன்றம் முக்கிய குற்றவாளிகளான முகமது அனஸ், முகமது ஷாருக்கான், சிவபிரசாத் முதியவர் லியக்கத் அளி ஆகியோருக்கு ஜூன் 6-ம் தேதி வரை சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உற்றவிட்டது.