மும்பை மிஸ்கிதா நகர் பகுதியில் சாவ்லா என்பவர் துணி வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மகள் ஜான்வி (16) அருகிலுள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜான்வி நேற்று மாலை வானத்தின் அழகை கண்டு ரசித்துக்கொண்டிருந்தார். அப்போது அதனை புகைப்படம் எடுப்பதற்காக தனது தந்தையிடம் கூறிவிட்டு 8 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டை மாடி பகுதிக்கு சென்றார்.

அங்கு வானத்தின் அழகை புகைப்படம் எடுத்துவிட்டு, செல்ஃபி எடுப்பதற்காக பக்கவாட்டு சுவரின் அருகே சென்றபோது சிறுமி நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் சிறுமிக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். உடனடியாக சிறுமியை அவருடைய தந்தை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறிவிட்டனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.