
பஞ்சாப் மாநிலம் மொஹல்லா ஜானியன் பகுதியில் அஜித் பால் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது காரை வீட்டிற்கு வெளியே நிறுத்தியிருந்தார். இந்நிலையில் இரவு நேரத்தில் இருசக்கர வாகனங்களில் வந்த 2 திருடர்கள் வெளியே நின்று கொண்டிருந்த காரை திருடுவதற்காக முயற்சி செய்தனர். அப்போது காரின் திருட்டு எதிர்ப்பு அலாரம் ஒலித்த போதும், வீட்டிலிருந்து யாரும் வெளியே வராத நிலையில் அந்த 2 நபர்களுள் ஒருவர் காரின் பூட்டை மாஸ்டர் சாவியின் மூலம் திறந்து வெறும் 15 வினாடிகளில் காரை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
இந்த சம்பவம் அனைத்தும் அப்பகுதியில் உள்ள சிசிடிவியில் பதிவான நிலையில் இரு நபர்கள் காரை திருடி சென்றது தெரியவந்தது. பின்னர் இது தொடர்பாக காரின் உரிமையாளர் அஜித் பால் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளிகளை அடையாளம் காணும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
फरीदकोट: 15 सेकंड में कार चोरी!
घर के बाहर खड़ी कार चोरों ने महज़ कुछ ही सेकंड में चोरी कर ली. दो बाइक सवार चोर सीसीटीवी में कैद, पुलिस ने जांच शुरू की. चोरी की इस वारदात से इलाके में फैली सनसनी.#Faridkot #CCTVFootage #ATReel #AajTakSocial pic.twitter.com/fz4vys995m
— AajTak (@aajtak) May 20, 2025
அப்பகுதியில் உள்ள பல வீடுகளில் மின்தடை காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்து இருப்பதால் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திவரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.