கர்நாடகாவில் உள்ள விஜயநகராவில் இன்று காங்கிரஸ் சார்பில் பேரணி கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் முக்கிய தலைவர்களான ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட கலந்து கொண்டனர். அப்போது பேசிய ராகுல் காந்தி கூறியதாவது, கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்து 2 ஆண்டுகள் ஆகிறது. 5 முக்கிய வாக்குறுதிகளை நாங்கள் கொடுத்தோம். பாஜகவும் மோடியும் காங்கிரஸ் கொடுத்த வாக்கை காப்பாற்றாது என்று கூறினர்.

ஆனால் ஒரு கோடி பெண்களுக்கு மாதம் 2000, ஒரு கோடி குடும்பங்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம், 4 கோடி பேருக்கு 10 கிலோ இலவச உணவு தானியங்கள், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் 3000 உதவித்தொகை ஆகிய 5 முக்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கர்நாடகாவில் நிறைய சமூக மக்கள் சொந்த நிலமிருந்தும் அதற்கான பத்திர உரிமம் இல்லாமல் இருப்பதை நான் அறிந்தேன்.

இதுகுறித்து கட்சி மூத்த நிர்வாகிகளிடம் பேசினேன். இன்று கர்நாடக அரசு ஒரு லட்சம் குடும்பங்களுக்கு அவர்களது நிலத்துக்கான உரிமத்தை வழங்க உள்ளது. அடுத்த 6 மாதங்களில் இது நடக்கும். மேலும் கர்நாடகாவில் 2000 வருவாய் கிராமங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் 500 வருவாய் கிராமங்கள் அறிவிக்கப்பட உள்ளது. கர்நாடகாவில் எல்லோருக்கும் அவரவர் நிலத்துக்கான உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்ற அவர் தெரிவித்தார்.