
தெற்காசிய நாடுகளில் அதிக கனிம வளங்கள் கொண்ட பகுதியாக இந்தோனேசியா காணப்படுகிறது. இது ஆசியாவிலேயே தங்க உற்பத்தியில் முதன்மையான நாடாக கருதப்படுகிறது. இங்கிருந்து சுமார் 100 டன் அளவிலான தங்கம் கடந்த 2024 ஆம் ஆண்டு உலக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்தோனேசியாவில் வடக்கு சுலேவேசி பகுதியில் மிகப்பெரிய தங்க சுரங்கம் ஒன்று அமைந்துள்ளது.
அதோடு கிழக்கு ஜாவா பகுதியில் உள்ள 2 சுரங்கங்கள் அரசு சார்பிலும், தனியார் நிறுவனங்களின் சார்பிலும் தங்கம் வெட்டி எடுக்கப்பட்டு உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. ஆனால் சிலர் அரசின் அனுமதி இல்லாமல் தங்க சுரங்கங்களை தோண்டி தங்கம் வெட்டி எடுக்கின்றனர். அந்த வகையில் மேற்கு பப்புவா மாகாணத்தில் உள்ள மலைப்பகுதியில் அரசு அனுமதி இல்லாமல் வெட்டப்பட்ட தங்க சுரங்கம் அமைந்துள்ளது.
இங்கு பெய்த கனமழையின் காரணமாக சுரங்கத்தில் உள்ளே வெள்ளம் புகுந்த நிலையில், சுரங்கம் இடிந்து விழுந்ததால் சம்பவ இடத்திலேயே 19 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த தகவல் தீயணைப்புத் துறையினருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து இடிப்பாடுகளில் சிக்கித் தவித்தவர்களை மீட்ட நிலையில் 6 பேரின் சடலங்களையும் கண்டுபிடித்துள்ளனர். மேலும் அந்தப் பகுதியில் தொடர்ந்து மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.