
ஜம்மு காஷ்மீர் பகல்காமில் ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் சூழ்நிலை உருவானது. இந்திய இராணுவம் மே 7-ஆம் தேதி “ஆபரேஷன் சிந்தூர்” தாக்குதலை நடத்தியது. இதில் பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் குறி வைத்து அழிக்கப்பட்டது.
பாகிஸ்தானின் பவல்பூர் (ஜெய்ஷ் தலைமையகம்) மற்றும் முரிட்கே (லஷ்கர்-ஏ-தொய்பா பயிற்சி மையம்) போன்ற இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், கிட்டத்தட்ட 100 பயங்கரவாதிகள் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டது.
#WATCH | Amritsar, Punjab: A soldier of the Indian Army says, “…Only 10% of the ammunition of ground-based air defence weapons and Army air defence weapons were used…We have recovered Kamikaze drones and micro-drones like YIHA-III and Songar, which are likely of Turkish… https://t.co/E3IjQWrlJ7 pic.twitter.com/5U3wcyFZ5n
— ANI (@ANI) May 19, 2025
இந்த நிலையில் அமிர்தசரஸில் உள்ள புனித பொற்கோயிலை குறி வைத்து பாகிஸ்தான் ட்ரோன் மற்றும் ஏவுகணை மூலம் தாக்க முயற்சி செய்தது. இந்தத் தாக்குதலில் “கமிகேஸ்” ட்ரோன்கள், YIHA-III, Songar போன்ற நவீன Turkish ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதாக இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.
ஆனால், இந்தியாவின் வான்வழி பாதுகாப்பு அமைப்பு எச்சரிக்கையுடன் செயல்பட்டு இந்த அனைத்து ட்ரோன்களையும் துல்லியமாக வீழ்த்தி தாக்குதலை முற்றிலுமாகக் முறியடித்தது. மேலும், மே 8-9 ஆம் தேதி இரவில் பாகிஸ்தான் மீண்டும் ஊடுருவ முயற்சி செய்தபோது, இந்திய இராணுவம் தனது துல்லியமான தாக்குதல்களால் அனைத்தையும் முறியடித்தது.