
மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள போபாவில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் தரம்பூரி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ரேகா(32) என்பவர் வசித்து வருகிறார். இவர் பல் வலியால் துடித்துள்ளார். இதனால் பல் வலிக்கு மாத்திரை வாங்குவதற்காக மெடிக்கலுக்கு சென்றுள்ளார். அங்கு மெடிக்கல் ஸ்டாப்பிடம் தனக்கு பல் வலிப்பதாக கூறியுள்ளார். அதோடு பல் வலி நிவாரண மருந்து வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் மெடிக்கல் ஸ்டாப் சல்பாஸ் என்ற மாத்திரையை வழங்கியுள்ளார். ரேகாவும் அந்த மாத்திரையை சாப்பிட்டு விட்டார்.
இதனால் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு செல்வதற்குள் அவர் உயிரிழந்து விட்டார். இது தொடர்பாக உருவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் பிரேத பரிசோதனையில் சல்பாஸ் என்ற மாத்திரையை சாப்பிட்டதால் தான் உயிரிழந்தது தெரியவந்தது. இதனால் மெடிக்கல் உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் மெடிக்கலில் ஸ்டாப்பாக இருந்தவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.