
அமெரிக்காவில் உள்ள கெண்டகி மாகாணத்தில் கடந்த சில நாட்களாகவே கன மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் குடியிருப்புகள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இந்நிலையில் கடுமையான வெள்ளத்தின் காரணமாக இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதோடு கனமழையின் காரணமாக ஏற்பட்ட மின்தடையால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் ஹெலிகாப்டர் மற்றும் படகுகள் மூலமாக மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மீட்பு குழுவினர் அழைத்து செல்கின்றனர். மேலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என மாகாணத்தின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.