வங்காளதேசத்தை சேர்ந்த திரைப்பட நடிகை, மாடல், பாடகி, தொலைக்காட்சி தொகுப்பாளர் என பன்முகத் திறமை கொண்ட நடிகை நுஸ்ரத் பரியா. இவர் தனது சினிமா வாழ்க்கையை ஒரு மாடலாகத் தொடங்கி பிரபல இயக்குனர் ஷாம் பெனிக்கல் இயக்கத்தில் வெளிவந்த “முஜீப் தி மேக்கிங் எ நேஷன்”  என்ற முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் வாழ்க்கை வரலாற்று படத்தின் மூலம் வங்காளதேச மக்களிடையே பெரும் புகழ் பெற்றார்.

கடந்த ஆண்டு ஹசினாவுக்கு எதிராக உள்நாட்டில் வெடித்த கலவரத்தில் நடிகை நுஸ்ரத் பரியா மீதும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இடைக்கால அரசால் ஹசீனா பதவி விலகியதுடன் இந்தியாவுக்குள் தஞ்சம் புகுந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து நுஸ்ரத் பரியா கடந்த ஞாயிற்றுக்கிழமை தாய்லாந்துக்கு செல்வதற்காக டாக்காவிலுள்ள ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது அதிகாரிகள் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர். இதனை பட்டா மண்டல உதவி ஆணையாளர் சபிகுல் இஸ்லாம் உறுதி செய்துள்ளார்.