மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நைஜீரியா நாட்டில் போகாஹாரம், அல்கொய்தா, ஐ.எஸ் போன்ற பயங்கரவாத குழுக்கள்  நாட்டின் அரசாங்கத்தை எதிர்த்து பல தாக்குதல்களை நடத்தி வருகின்றது. இந்நிலையில் கொடூர கடத்தல் கும்பலான போகாஹாரம் என்னும் பயங்கரவாத குழு தற்போது நைஜீரியாவில் உள்ள கிராம மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

அதாவது இந்த கும்பல் கராண்தி கிராமத்தில் அமைந்துள்ள குடிசைகள் மீது நள்ளிரவு நேரத்தில் தீ வைத்ததோடு, அங்கிருந்த விவசாயிகளை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.

அதன் பின் வீடுகளில் இருந்த தானியங்கள், உணவு பொருள்கள் போன்றவற்றை கொள்ளையடித்துவிட்டு தப்பி சென்றனர். இந்த கொடூர தாக்குதலில் 23 விவசாயிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

அதோடு குழந்தைகள் உள்பட 50க்கும் மேற்பட்ட கிராம மக்க்ளை கொள்ளை கும்பல் கடத்திச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் ராணுவத்தினருக்கு தெரிய வந்த நிலையில் கொள்ளை கும்பலால் கடத்திச் செல்லப்பட்ட கிராம மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.