
ரஷ்யாவின் லெனின்கிராட் பகுதியில், 11 வயது மாணவனை பாலியல் முறையில் தொந்தரவு செய்ததற்காக, 27 வயதான திருமணமான பள்ளி ஆசிரியை அன்னா பிளாக்ஸ்யூக் கைது செய்யப்பட்ட நிலையில், நீதிமன்றம் அவருக்கு 9 ஆண்டுகள் கடுமையான சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியுள்ளது. பள்ளி மாணவனின் தாயார், தனது மகனின் வாட்ஸ் அப்பில் அவருக்கும் ஆசிரியைக்கும் இடையிலான அவதூறான மெசேஜ்கள் மற்றும் புகைப்படங்களை கண்டுபிடித்ததிலிருந்து இந்த விபரீதம் வெளிச்சத்துக்கு வந்தது.
மாணவனிடம் பிளாக்ஸ்யூக், தன் மார்பகங்களை தொட வற்புறுத்தியதோடு, வாயில் முத்தம் கொடுக்க கட்டாயப்படுத்தியுள்ளார். அதோடு மாணவனின் அந்தரங்க உறுப்புகளையும் தொட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும், தனது நிர்வாண படங்களை மாணவனுக்கு அனுப்பியதோடு, அவனிடமிருந்தும் அதுபோலவே படங்கள் அனுப்புமாறு கோரியிருந்தார். மாணவனின் தாயார் உடனடியாக பள்ளித் தலைமை ஆசிரியரிடம் புகார் அளிக்க, போலீசார் வழக்குப் பதிந்து பிளாக்ஸ்யூக்கை கடந்த 2024 பிப்ரவரியில் கைது செய்தனர்.
நான்கு மாதங்களுக்கு மேலாக தொடர்ச்சியான பாலியல் தொந்தரவுக்கு மாணவன் உள்ளாகியதாக நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டது. தன்னை குற்றமற்றவளாகவும், மாணவனே முதலில் தவறாக நடந்துகொண்டதாகவும் பிளாக்ஸ்யூக் தரப்பில் கூறப்பட்டது. இருப்பினும், அனைத்து ஆதாரங்களும் மற்றும் சாட்சியங்களும் பெற்று, நீதிமன்றம் “14 வயதிற்கும் குறைவான வயதுடைய குழந்தையின் மீது பாலியல் வன்முறை” என்ற பிரிவின் கீழ் தீர்ப்பு வழங்கியது. மேலும், ஒரு வருட காலம் ஆசிரியராக பணிபுரியக்கூடாது என்றும் உத்தரவிட்டது.