
தமிழக சட்டசபையில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட நான்கு மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார். மொத்தம் 18 மசோதாக்கள் அனுப்பப்பட்டதில் நிதிநிலை அறிக்கை தொடர்பான 4 மசோதாக்களுக்கு அவர் ஒப்புதல் வழங்கியுள்ளார். கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி முதல் ஏப்ரல் 19ஆம் தேதி வரை சட்டசபை நடைபெற்ற போது 18 மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்ட நிலையில் அதில் நான்கு மசோதாக்களுக்கு தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் முன்னதாக தமிழக அரசு ஆளுநர் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் இருப்பதாக வழக்கு தொடர்ந்த நிலையில் உச்ச நீதிமன்றம் ஆளுநருக்கு தனி அதிகாரம் கிடையாது எனக் கூறி அந்த மசோதாக்களுக்கு சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதல் வழங்கியது குறிப்பிடத்தக்கதாகும்.