
12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற எந்த பாடப்பிரிவு மாணவர்களும் 2025-2026 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் டிப்ளமோ இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கையில் சேரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கணிதம்-அறிவியல் பாடப் பிரிவு மாணவர்கள் மட்டுமே பாலிடெக்னிக்கில் நேரடியாக இரண்டாம் ஆண்டு சேர முடியும் என்ற விதி தற்போது தளர்த்தப்பட்டு, அனைத்து பாட பிரிவு மாணவர்களும் சேரலாம் என தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.