
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியினை தொடங்கிய நிலையில் அடுத்து வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட இருக்கிறார். தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளராக புஸ்ஸி ஆனந்த் இருக்கிறார். இவர் நேற்று சென்னை பனையூரில் நலிவடைந்த தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகளுக்கு கட்சி சார்பில் ஆட்டோ வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அப்போது புது ஆட்டோவில் ஒரு நிர்வாகி நடிகர் விஜய் மற்றும் புஸ்ஸி ஆனந்த் புகைப்படத்தை சேர்த்து ஒட்டி இருந்தார். இதனைப் பார்த்த புஸ்ஸி ஆனந்த் விஜய்க்கு நான் சரிநகர் கிடையாது எனக்கூறி தன்னுடைய போட்டோவை மட்டும் ஒரு கத்தியால் கிழித்து தனியாக எடுத்துவிட்டார். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை பனையூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் வாழ்வாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிர்வாகிக்கு முன் பணம் கட்டி ஆட்டோ எடுத்து கொடுத்தனர். pic.twitter.com/y7Qx26NNG7
— Sangeetha -TVK✨ (@sangeet29332013) May 14, 2025