ராமநாதபுரம் மாவட்டம் பாரதிநகரை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி லோகம்மாள். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். பாலமுருகன் வெளிநாட்டில் வேலை பார்ப்பதால் லோகம்மாள் தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார்.

கடந்த ஏப்ரல் மாதம் 12-ஆம் தேதி லோகம்மாள் வீட்டை பூட்டி விட்டு தங்கை வீட்டிற்கு சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 5 பவுன் தாங்க நகையை திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து லோகம்மாள் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஷகீல்(30) என்பவரை கைது செய்தனர். இவர் மீது 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடப்பாரை, ஸ்குரூ டிரைவர் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி ஷகீல் கைவரிசை காட்டியுள்ளார்.

போலீஸ் ஒரு மாதத்திற்குள் கண்டுபிடித்தால் கொள்ளையடித்த நகைகளை திருப்பி கொடுத்துவிட்டு சிறைக்கு சென்று விடுவார் அப்படி இல்லை என்றால் நகைகளை விற்பனை செய்து உல்லாசமாக ஆடம்பர வாழ்க்கை வாழ்வது இவரது வழக்கமாக இருந்துள்ளது.