ராமநாதபுரம் மாவட்டம் ஏனாதி கிராமத்தை சேர்ந்தவர் முரளி ஜெகன். ராணுவ வீரரான முரளி ஜெகன் பூட்டான் எல்லைப் பகுதியில் வேலை பார்த்து வருகிறார். இதற்கு சொந்தமான வீட்டில் முரளிதரணியின் மனைவி உமாரணியும், தாய் முத்துமீனாவும் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் உறவினரான ராமச்சந்திரன் என்பவர் முரளி ஜெகனுக்கு சொந்தமான வீட்டை அபகரிக்க முயற்சி செய்ததாக தெரிகிறது. கடந்த 7-ஆம் தேதி கடலாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்ற உமாராணி மற்றும் முத்துமீனாவை ராமச்சந்திரன், பார்த்திபன், ஈஸ்வரி, தட்சிணாமூர்த்தி, உள்ளிட்ட 6 பேர் தாக்கியுள்ளனர்.
இதனால் காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்த புகாரின் பெயரில் போலீசார் 4 பேர் மீது மட்டும் வழக்கு பதிவு செய்துள்ளனர். ராமச்சந்திரன், பார்த்திபன் ஆகிய இரண்டு பேர் மீது வழக்கு பதிவு செய்யவில்லை.
அவர்கள் இருவரும் தொடர்ந்து மிரட்டி வருவதால் தனது தாய் மற்றும் மனைவிக்கு பாதுகாப்பு அளிக்குமாறு முரளி ஜெகன் வீடியோ ஒன்றை பதிவிட்டார். இதனையடுத்து தங்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு உமாராணி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
