நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே பெரியகுளம் பகுதியில் சுப்பிரமணியன் (37) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய சகோதரர் பழனி சங்கர் (33) இவருக்கு சமீபத்தில் காதல் திருமணம் நடந்து முடிந்தது. இதனால் பழனிசங்கருக்கும், அவரது அண்ணன் சுப்ரமணியனுக்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் பழனி சங்கர் தனது மனைவியுடன் வீட்டின் முன்பு நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த சுப்பிரமணியன் பழனி சங்கரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது தகராறாக மாறிய நிலையில், ஆத்திரமடைந்த சுப்பிரமணியன் கையில் வைத்திருந்த கத்தியால் தம்பியை தாக்கிய நிலையில் கொன்று விடுவேன் என்று மிரட்டி விட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

அவர் தாக்கியதில் பழனிசங்கருக்கு காயங்கள் ஏற்பட்டதால்  இது தொடர்பாக அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சுப்பிரமணியை கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.