கரீபியன் கடலில் உள்ள சிண்ட் மார்டன் தீவின் இளவரசி ஜூலியானா சர்வதேச விமான நிலையத்தில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவத்தின் வீடியோ இணையத்தில் பரவலாக வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், கடற்கரைக்கு நேரே உள்ள இந்த விமான நிலையத்தில், MD80 வகை ஒரு பெரிய விமானம் புறப்பட முயன்ற போது, அதன் எஞ்சினிலிருந்து வெளியான சக்தி வேகமாக தாக்கியதால், பின்புறத்தில் நின்றிருந்த சுற்றுலா பயணிகள் நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.

 

95 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ X பக்கத்தில் பகிரப்பட்டு, 36 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களையும், 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விருப்பங்களையும் பெற்றுள்ளது. விமானப் போக்குவரத்து நிபுணர்களின் கருத்துப்படி, வணிக விமானங்களில் இருந்து வரும் ஜெட் வெடிப்பு காற்றை மணிக்கு 160 முதல் 240 கிமீ வேகத்தில் வெளியேற்றும் சக்தி கொண்டதாகும். இதனால் 100 மீட்டருக்குள் 120-130 decibel சத்தம் உண்டாகும்.

இது மனிதனின் காது கேட்கும் திறனை உடனடியாக பாதிக்கக்கூடிய அளவு என தெரிவிக்கப்படுகிறது. இந்த வீடியோவை பார்த்த பல நெட்டிசன்கள், “இதுபோல் பின்புறத்தில் நின்று படம் எடுப்பது முட்டாள்தனம்”, “அவர்களை உண்மையாகவே தூக்கிச் சென்றதுபோல் தெரிகிறது”, “இது மிகவும் ஆபத்தானது, இனி மக்கள் விடுமுறையை பாதுகாப்பாக அனுபவிக்க முடியாது” என கருத்துத் தெரிவித்துள்ளார்.