திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பணகுடி மற்றும் வள்ளியூருக்கு இடையே உள்ள நான்கு வழிச்சாலையில் கனரக லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென எதிர்பாராத விதமாக டிரைவர் கட்டுப்பாட்டை இழந்ததால் லாரி சாலை அருகே உள்ள தடுப்புச் சுவர் மீது மோதி தலைகீழாக கவிழ்ந்துள்ளது.

அந்த விபத்தில் சிக்கிய லாரி ஓட்டுனர் சங்கரை அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்து உடனடியாக பணகுடி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து நடத்திய விசாரணையில், திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து கருங்கற்களை ஏற்றிக்கொண்டு கேரளாவில் இறக்கிவிட்டு திரும்பிய போது அந்த விபத்து ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. மேலும் இச்சம்பவத்தால் நான்குவழிச் சாலையில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.