
ரஷ்யா-உக்ரைன் இடையே கடந்த 2022 ஆம் ஆண்டு தொடங்கிய போர் கடந்த 3 வருடங்களாக நடந்து வருகிறது. இரு நாடுகளுக்கும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் முயற்சிகள் மேற்கொண்டது. ஆனால் அது தோல்வியடைந்த நிலையில் தற்போது நேரடி பேச்சு வார்த்தைக்கு வருமாறு ரஷ்ய அதிபர் புதின் உக்ரைனுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அதாவது பிரச்சனைகளை சரி செய்யவும், அமைதியை நிலைநாட்டவும் பேச்சு வார்த்தை நடத்த நாங்கள் தயார் என்று ரஷ்ய அதிபர் புதின் கூறியுள்ளார். இதற்காக துருக்கி தலைநகர் அங்காராவில் வரும் 15ஆம் தேதிக்குள் பேச்சு வார்த்தை நடத்த இருப்பதாகவும், அதற்கு உக்ரைன் வருமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து ரஷ்ய அதிபரின் அழைப்பிற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பதில் கூறியுள்ளார். அதில் “நேரடி பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார். இந்த இனப்படுகொலை தொடர்வது பயனற்றது. ஆனால் ரஷ்யா நிபந்தனையற்ற போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டால் நாங்கள் பேச்சு வார்த்தைக்கு வருகிறோம்.
ரஷ்யா வார்த்தைகளால் தங்கள் போர் இலட்சியங்களை மறைக்காமல் முதலில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ள வேண்டும். அதன் பின் பேச்சு வார்த்தைகள் நடத்தலாம் என்று ஜெலன்ஸ்கின் தலைமை தளபதி தெரிவித்துள்ளார்.