தெலுங்கானா மாநிலம் ராஜண்ணா சிரிசில்லா மாவட்டத்தில் நிகழ்ந்த சம்பவம், அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அருண்குமார்–மாதவி தம்பதியருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர்.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு, அருண்குமார் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததிலிருந்து, மாதவி தனது குழந்தைகளுடன் தனியாகவே வசித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த ரிஷி என்ற இளைஞருடன் மாதவிக்கு பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.

மாதவியும் ரிஷியும் அடிக்கடி தனிமையில் சந்தித்த போது, மகன் ஆரூஷி (5) எப்போதும் தாயுடன் இருப்பதால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இந்த கோபத்திலேயே, ரிஷியுடன்  சேர்ந்து மாதவி தனது மகனை அடிக்கத் தொடங்கியதாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று, இருவரும் ஆரூஷியை கடுமையாக தாக்கியதில், சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். இதனால் அச்சத்தில் இருவரும் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர்.

தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் ஆரூஷியின் உடலை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இருவரையும் தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.