ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலால் இருநாட்டிலும் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நொய்டா அருகே ரபுபுரா கிராமத்தில் சீமா ஹைதர் என்ற பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பெண்மணி வசித்து வருகிறார். அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் “ஹிந்துஸ்தான் ஜிந்தாபாத்….ஜெய்ஹிந்த்….ஜெயபாரத்…”என்று உற்சாகமாக கூறியுள்ளார். அதோடு “ஜெய்ஹிந்த்… ஆப்ரேஷன் சிந்தூர்… இந்திய ராணுவம்…”என்று இன்னொரு பதிவையும் வெளியிட்டுள்ளார்.

 

Instagram இல் இந்தப் பதிவைக் காண்க

 

Seema Sachin பதிவைப் பகிர்ந்துள்ளார் (@seema____sachin10)

இவரது பதிவுகள் இணையத்தில் வைரலான நிலையில் பாகிஸ்தானில் கடும் எதிர்வினையை உருவாக்கியுள்ளது. இதைத் தொடர்ந்து சீமாவை பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டும் என்று கேள்விகள் எழுப்பப்பட்ட நிலையில் இந்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த சீமா ஹைதர் ஆன்லைன் பப்ஜி விளையாட்டு மூலம் இந்தியாவை சேர்ந்த சச்சின் மீனா என்பவருடன் நட்பாக பழகியுள்ளார். இந்த நட்பு நாளடைவில் காதலாக மாற 2023 ஆம் ஆண்டு மே 13 ஆம் தேதி தனது 4 குழந்தைகளுடன் நேபாளம் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்தார்.

அதன் பின்னர் இந்து முறைப்படி சச்சின் மீனாவை திருமணம் செய்து கொண்ட அவர் தற்போது இந்தியாவிலேயே வசித்து வருகிறார். இந்த சமயத்தில் இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக இவர் பதிவை வெளியிட்டுள்ளது பாகிஸ்தானுக்கு கடும் எதிர்வினையை ஏற்படுத்தியுள்ளது என்று கூறப்படுகிறது.