
டெல்லி என் சி ஆர் பகுதியில் வசித்து வரும் ஒரு நபர் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கனமழையின் காரணமாக வீட்டில் இருந்தே வேலை செய்வதாக மேலாளரிடம் அனுமதி கேட்டுள்ளார். அப்போது அதனை மறுத்த மேலாளர் ராபிடோ அல்லது indrive மூலம் நிறுவனத்திற்கு வருமாறு ஊழியரை வலியுறுத்தினார். அதற்கு அந்த ஊழியர் “டாக்ஸி கட்டணம் என் ஒரு நாள் சம்பளத்தை விட அதிகம். எனவே என்னால் வர இயலாது” என்று தெரிவித்தார்.
அதன் பிறகு மேலாளர் அவரிடம் மறுநாள் அலுவலகத்திற்கு வரும்படி கூறினார். இந்த உரையாடல் நிகழ்ச்சி தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் மத்தியில் சிரிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதில் ஒருவர் “நான் ஒரு மேலாளராக இருந்தால், இந்த ஊழியரை நேசித்திருப்பேன்” என்று கூறியுள்ளார். இன்னொருவர் “மிகவும் நியாயமில்லாத முடிவு, சம்பளம் குறைவாக இருக்கும் போது செலவுகளை கருதி நியாயமான முடிவெடுத்தது தான் புத்திசாலித்தனம்” என்று பதிவிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து இந்த உரையாடலின் மூலம் மேலாளரின் பிடிவாதம் மற்றும் ஊழியரின் நியாயமான பதில் நெட்டிசன்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இணையத்தில் வைரலாகி வரும் இந்த பதிவு பல நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்களிடையே விவாதத்திற்கு ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.