திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் சித்ரா பௌர்ணமி திருவிழா வருகிற 11,12 ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இந்நிலையில் கோவிலின் அருகே அமைந்துள்ள மதுபான கடைகள் மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.

அதன்படி திருவண்ணாமலை காமராஜர் சிலை அருகில் உள்ள மதுபான கடை, சமுத்திரம் பகுதியில் உள்ள மதுபான கடை, மணலூர் பேட்டை பகுதியில் உள்ள மதுபான கடை, திருவண்ணாமலை நகரத்தில் இயங்கி வரும் மதுபான கடைகளுடன் சேர்ந்த மது கூடங்கள், வேக்கிங்கால் புறவழிச் சாலையில் உள்ள டாஸ்மாக் மதுபான கடை, எம்.எல்.ஏ உரிமம் பெற்ற மதுபான கடைகள் மற்றும் மது கூடங்களுக்கு வருகிற 12-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டு மூடப்படும் என்று கூறியுள்ளார்.