டெல்லி உச்சநீதிமன்றத்தில் ஒரு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தான் அந்த பெண்ணை பலாத்காரம் செய்யவில்லை எனவும் பலாத்காரம் செய்தவருக்கு உதவி மட்டும் தான் செய்ததாகவும் ஒருவர் வழக்கு தொடர்ந்தார்.

அதோடு பாதிக்கப்பட்ட பெண் தன்னை பலாத்காரம் செய்ததாக என்னுடைய பெயரை குறிப்பிடவில்லை என்றும் எனவே வழக்கிலிருந்து என்னை விடுவிக்க வேண்டும் என்றும் அந்த நபர் தன் மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் நீதிபதிகள் அதிரடியான தீர்ப்பினை வழங்கினர். அதாவது, கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்குமே பொதுவாக ஒரே ஒரு நோக்கம் மட்டும்தான் இருக்கும்.

ஒருவர் மட்டுமே பாலியல் பலாத்காரம் செய்திருந்தாலும் அதற்கு துணைபுரிந்த அனைவருக்கும் அந்த பாலியல் வன்கொடுமைக்கான தண்டனை கண்டிப்பாக கிடைக்கும்.

மேலும் பாலியல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவரும் பாலியல் வன்கொடுமை செய்ததற்கான ஆதாரத்தை வழங்க வேண்டியது கிடையாது. கண்டிப்பாக அனைவருக்கும் தண்டனை உறுதி என்று கூறி அவரின் மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்ற உத்தரவிட்டது.