
ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக குற்றம் சாட்டும் நிலையில் மத்திய அரசு பாகிஸ்தானுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் உள்ள விமானத்தளங்கள் மற்றும் கண்டோன்மென்ட் பகுதி ஆகியவற்றின் புகைப்படங்களை பாகிஸ்தான் நாட்டு உளவு அமைப்புகளுக்கு சிலர் கசிய விட்டதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி காவல் துறையினர் விசாரணை நடத்தியதில் பலக் ஷேர் மஷி மற்றும் சுராஜ் மஷி ஆகியோர் இந்த குற்றச்சாட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்தனர் . அவர்களிடம் நடத்திய விசாரணையில் பாகிஸ்தான் உளவு அமைப்பினருடன் தொடர்பில் இருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட 2 நபர்களின் மீது ரகசிய அலுவலக ரகசிய சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் பல உண்மை தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.