திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே வீரகநல்லூர் ஊராட்சியில் கணினி வழி வீட்டுமனை பட்டா வழங்க ரூ.75 ஆயிரம் லஞ்சம் பெற்றுக் கொண்ட கிராம நிர்வாக அலுவலர் கோடீஸ்வரி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீரகநல்லூரைச் சேர்ந்த கோடீஸ்வரி (47) கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்துள்ளார். கணினி வழி வீட்டுமனை பட்டா வழங்க  சமத்துவபுரம் பகுதியில் வசித்து வந்த 25 பேரிடம் ஒருவர் ₹3,000 வீதம் மொத்தமாக ₹75,000 லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, அந்த பகுதியைச் சேர்ந்த மதுசூதனன் என்பவர் திருவள்ளூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், அதிகாரிகள் திட்டமிட்டு ரசாயனப் பொடி பூசப்பட்ட பணத்தை மதுசூதனனிடம் கொடுத்து அனுப்பினர்.

சம்பவத்தன்று மதுசூதனன் ₹75,000ஐ கோடீஸ்வரியிடம் கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக கைது செய்தனர். இதையடுத்து கோடீஸ்வரியிடம் விசாரணை நடத்தி, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.