நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் தேர்வு செய்த பெங்களூர் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழந்து 213 ரன்கள் எடுத்தது.
அதன்பின் களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 216 ரன்கள் எடுத்து தோல்வியை அடைந்தது. இதனை அடுத்து 2 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
அந்தப் போட்டியில் அரை சதம் அடித்து சிஎஸ்கேவுக்கு எதிராக புதிய சாதனையை படைத்தார் விராட் கோலி. அதாவது ஐபிஎல் தொடரில் சிஎஸ்கேவுக்கு எதிராக அதிக அரைசதம் அடித்த வீரர்களின் பட்டியலில் அனைவரையும் பின்னுக்கு தள்ளி விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார்.
அந்தப் பட்டியலில் ஏற்கனவே ரோகித் சர்மா 9 முறையும், ஷிகர் தவான் 9 முறையும், டேவிட் வார்னர் 9 முறையும் அரை சதம் அடித்து சாதனை படைத்தனர். அதனை முறியடிக்கும் வகையில் தற்போது நடப்பு போட்டியில் சிஎஸ்கேவுக்கு எதிராக விராட் கோலி 10 முறை அரை சதம் அடித்து அபார சாதனை படைத்துள்ளார்.
