உத்திரபிரதேசம் மாநிலத்தின் மொராபாத் மாவட்டத்தில் குல்லிபூர் அரசு தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் முதல்வர் மற்றும் பெண் ஆசிரியருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருந்தார்.

அவரிடம் பேசிக் கொண்டிருந்த ஆசிரியர் திடீரென ஓடிவந்து முதல்வரை நாற்காலியுடன் சேர்த்து கீழே தள்ளி விட்டார். இதனால் கீழே விழுந்த பள்ளி முதல்வர் மீண்டும் எழுந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதனை கண்டு கொள்ளாமல் ஆசிரியர் அங்கிருந்து புறப்பட்டு செல்கிறார்.

இதனால் அங்கு பதற்றம் நிலவியது. இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. கல்வித் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது போன்ற செயல்கள் பள்ளி வளாகத்தில் நடக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பள்ளி நிர்வாக ஒழுங்கமைப்புக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.