திருநெல்வேலி மாவட்டம் தேவர் குளம் வடக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார்(எ) விஜயராஜ்‌. இவர் கொலை முயற்சி, அடிதடி, திருட்டு மற்றும் வழிப்பறி போன்ற செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களை பயமுறுத்தி வருவதாக மானூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

இதே போல பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சீவலப்பேரி பகுதியை சேர்ந்த ஆறுமுகம்  என்பவரும் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் எஸ்.பி பரிந்துரையின் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் விஜயகுமார், ஆறுமுகம் ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பித்தார்.