சிவகிரியில் உள்ள விளாங்கோட்டு வலசு பகுதியில் ஒரு தோட்டத்து வீடு அமைந்துள்ளது. இங்கு ஒரு வயதான தம்பதி தனியாக வசித்து வந்துள்ளனர். அதாவது அந்தத் தோட்டத்தில் பாக்கியம் (65)-ராமசாமி (75) தம்பதியினர் வசித்து வந்த நிலையில் அவர்கள் தற்போது கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் வீட்டிலிருந்து 15 சவரன் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் குற்றவாளிகளை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
