குவைத்தில் உள்ள அப்பாஸியா பகுதியில் இன்று காலை நடந்த திடீர் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கேரளாவை சேர்ந்த ஒரு தம்பதி தங்கள் வீட்டில் சடலமாகக் காணப்பட்டுள்ளனர். அவர்களது உடல்களில் கத்தி குத்து காயங்கள் இருப்பதால், இது ஒரு கொடூரமான கொலை என நம்பப்படுகிறது. இந்தச் சம்பவம் அப்பாஸியா பகுதியில் வசிக்கும் இந்தியர்கள், குறிப்பாக மலையாளிகளிடையே பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மரணமடைந்தவர்கள் கண்ணூரைச் சேர்ந்த சுராஜ் (வயது 33) என்பது தெரியவந்துள்ளது. இவர் குவைத் சுகாதார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஜாபர் அல் அகமது சுகாதார மையத்தில் பணிபுரிந்து வந்தார். அவரது மனைவி பின்சி (வயது 31), எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்தவர், குவைத் பாதுகாப்பு துறையில் நர்ஸாக வேலை பார்த்துவந்தார். இருவரும் சமீபத்தில் வேலை முடித்து வீடு திரும்பிய நிலையில், இருவருக்கும் வீட்டில் கடுமையான வாக்குவாதம் நடந்ததாக அண்டை வீட்டினரும் நண்பர்களும் தெரிவித்துள்ளனர்.
எனவே திட்டமிட்ட கொலை, அல்லது தற்கொலை முயற்சி என பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தம்பதிகள் இருவரும் வேலை வாய்ப்புக்காக அவுஸ்திரேலியாவிற்குப் போகத் திட்டமிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்ற சம்பவம் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களிடையே பாதுகாப்பு மற்றும் குடும்ப உறவுகளில் உள்ள அழுத்தங்களை வெளிக்கொணர்கிறது. போலீசார் உடனடியாக விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளதுடன், இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன.
