
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மீரட்டில் கிருஷ்ணாபுரி அரசு பள்ளியில் ஆசிரியர்கள் வகுப்பறைக்குள் நடனமாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் ஒரு பெண் ஆசிரியர் ஒருவர் 90களில் வெளியான பிரபல பாலிவுட் பாடல் ஒன்றிற்கு நடனமாட தொடங்குகிறார்.
அதன் பின்னர் பள்ளியில் உள்ள மற்றொரு பகுதியில் ஆசிரியர்கள் குழு பிரபல பஞ்சாபி பாடல் ஒன்றிற்கு நடனமாடு ஆடுகின்றனர். அதே நேரத்தில் மாணவர்கள் சிலர் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்கின்றனர். அப்பகுதியில் உள்ள குப்பைகளை எடுப்பது, தரையை துடைப்பது போன்ற வேலைகளில் ஈடுபடுகின்றனர். ஆசிரியர்கள் அருகில் நின்று சில சில அறிவுறுத்தல்கள் வழங்குகின்றனர்.
#मेरठ में मैडम का डांस..#स्कूल में शिक्षिकाएं कर रही डांस..#कृष्णपुरी के सरकारी विद्यालय में बच्चों से झाड़ू लगाने, दरियां धोने और पर्दे धुलवाने का मामला..वीडियो सोशल मीडिया पर वायरल..#Meerut #ViralVideo @DmMeerut @CMOfficeUP pic.twitter.com/xguAhwaMVg
— पत्रकार गंगेश पाण्डेय (@GangeshReporter) April 12, 2025
இதுபோன்ற காட்சிகள் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவங்கள் பள்ளியில் பண்டிகைகள் கொண்டாடப்படுவது போல தெரியவில்லை. ஆனால் மாணவர்கள் தானாக முன்வந்து தூய்மை பணியில் ஈடுபட்டனரா என்பதும் தெரியவில்லை. இவை அனைத்தும் பள்ளியின் வகுப்பு நேரங்களில் நடைபெற்று உள்ளது.
இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பலரும் வகுப்பு நேரத்தை தவறாக ஆசிரியர்கள் பயன்படுத்துவதை எடுத்துக்காட்டுகிறது என விமர்சித்து வருகின்றனர். மேலும் அந்த சம்பவங்கள் ஒரு நிகழ்ச்சிக்காக திட்டமிடப்பட்ட செயல்பாடா அல்லது கண்காணிப்பு வழிமுறைகள் இல்லாமல் வகுப்பு நேரத்தை வீணடிக்க நடைபெற்றதா என இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.