
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த வகையில் இன்றும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தெற்கு வங்க கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாகத்தான் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் தென் தமிழகத்தின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவுவதால் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் வருகிற 12-ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையைப் பொறுத்தவரையில் இன்று வானம் மேகம் மூட்டத்துடன் காணப்படுவதோடு நகரின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.