மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில் மத ஒற்றுமையை வெளிக்காட்டும் விதமாக ஒரு அற்புதமான நிகழ்ச்சி தொடர்ந்து 50 ஆண்டுகளாக நடந்து வருகிறது. அதாவது ரம்ஜான் திருநாளன்று காஜி முஹம்மது இஸ்ரத் அலி என்பவரை ஒரு இந்து குடும்பம் குதிரையில் வண்டியில் மசூதிக்கு அழைத்துச் செல்லும் வழக்கம் பாரம்பரியமாக உள்ளது.

கடந்த 50 ஆண்டுகளாக ராம் சந்திர சல்வாடியா என்பவர் காஜியை குதிரை வண்டியில் மசூதிக்கு அழைத்துச் சென்ற நிலையில் கடந்த 2017ல் அவர் உயிரிழந்தார். அதன் பிறகு அவரது மகன் சத்யநாராயணா சல்வாடியா இதனை தொடர்ந்து செய்து வருகிறார்.

அதன்படி இந்த ஆண்டு நடைபெற்ற ரம்ஜான் திருநாளின் போது காஜியை சல்வாடியாவின் மகன் சத்ய நாராயணன் என்பவர் ராஜ்மொஹல்லா பகுதியில் இருந்து காஜியை குதிரை வண்டியில் ஏற்றுக்கொண்டு சதர் பஜார் மைய மசூதிக்கு அழைத்துச் சென்றார்.

இந்த வழக்கத்தை இந்து குடும்பமான சல்வாடியா குடும்பம் 50 ஆண்டுகளாக கடைபிடித்து வருவது மத ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து ஷஹர் காஜி இஸ்ரத் அலி “இந்தூரில் மட்டுமே இந்து குடும்பம் காஜியை மதப்பூர்வமாக மசூதிக்கு அழைத்துச் செல்லும் பழக்கம் இருக்கிறது” என பெருமையுடன் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் ஜீதூ படேல்வும் கலந்து கொண்டுள்ளார். அங்கு காஜிக்கு வாழ்த்து தெரிவித்த அவர் “கங்கை-ஜமுனா கலாச்சாரம் என்பது இந்தியாவின் இதயம் ஆகும். வெறுப்பு பரப்புவோர் நாட்டை நேசிப்பவர்கள் அல்ல” என அவர் தெரிவித்தார்.