
ஐபிஎல் தொடரின் நான்காவது போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. ரிஷப் பண்ட் தலைமையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங்கை தொடங்கிய லக்னோ அணியில் தொடக்க வீரர் 16 ரன்னில் வெளியேறினார். அதனை அடுத்து ஜோடி சேர்ந்த ல் மார்ஷ் மற்றும் நிக்கோலஸ் பூரன் அதிரடியாக ஆடி இருவரும் அரை சதம் அடித்தார்கள். அடுத்ததாக ரிஷப்பன்ட் 6 பந்துகளை எதிர் கொண்டு ஓட்டங்கள் எடுக்காமல் டக் அவுட் ஆனார். 210 ஓட்டங்கள் என்று வெற்றி இலக்கோடு இறங்கிய டெல்லி அணி இரண்டு ஓவர் முடிவில் ஆறு ஓட்டங்கள் மட்டுமே எடுத்து மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
12.3 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணி 113 ரன்கள் மட்டுமே எடுத்ததால் லக்னோ அணி வெற்றி பெறும் சூழல் நிலவியது. அடுத்ததாக வந்த அஷ்தோசர்மா அசத்தலாக ஆடி 31 ரன்களில் 61 ஓட்டங்கள் எடுத்து டெல்லி அணியை வெற்றி பெற வைத்தார். ஆனால் கடைசியாக மோகித் சர்மா ஸ்டம்பிங் வாய்ப்பு கொடுத்தார். அதை தவறவிட்ட ரிஷப் பண்ட் LBW வில் தான் குறியாக இருந்தார். மோகிஷ் சர்மா ஒரு ஓட்டம் எடுக்க முயற்சிப்பார் அப்போது பில்டர் வீசிய பந்தை வாங்கி ரிஷப் பண்ட் ரன் அவுட் செய்திருந்தாலே லக்னோ அணி வெற்றி பெற்றிருக்கும்.
இந்த நிலையில் போட்டிக்கு பிறகு பேசிய ரிஷப் பண்ட், மோஹித் சர்மாவின் பந்து படாமல் இருந்திருந்தால் நான் ஸ்டம்பிங் செய்திருப்பேன் என்று கூறியுள்ளார். ஆனால் இந்த விளக்கத்தை ஏற்க மறுக்கும் ரசிகர்கள் ஆறு பந்துகளை எதிர்கொண்டு டக் அவுட் ஆனது குறித்தும் ஒரே பந்தில் வெற்றிக்கு கிடைத்த இரண்டு வாய்ப்புகளை தவறவிட்டது குறித்தும் விமர்சனம் செய்து வருகிறார்கள்.