மும்மொழி கொள்கையை அமல்படுத்தினால் தான் நிதி ஒதுக்கப்படும் என்ற மத்திய அரசின் நிலைப்பாடு தொடர்பாக பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அப்போது திமுக எம்எல்ஏ எழிலன் கூறியதாவது, மத்திய அரசால் இந்தி பெயரில் தான் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

இருமொழி கொள்கைக்கு தமிழகத்தில் அங்கீகாரம் பெற்றுள்ளோம். ஒரு ரூ போட்டதற்கு ருத்ரதாண்டவம் ஆடுகின்றனர். இந்தியை பழக்கப்படுத்துவதற்கு மத்திய அரசு முயற்சி செய்கிறது. இருமொழி கொள்கையால் தான் கல்வியின் தரம் உயர்ந்துள்ளது என கூறியுள்ளார்.