
மும்பையில் கோரேகாவ் என்ற பகுதியில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மும்பையில் கோரேகாவ் என்ற பகுதியில் சந்திரசேகர் சவுகான்(36)- ரஞ்சி சவுகான் தம்பதியினர் வசித்து வந்தனர். இதில் சந்திரசேகர் சௌகான் திரைத்துறையில் ஒரு பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவருடைய மனைவி ரஞ்சுவுக்கு ஷாருக் என்ற நபருடன் கள்ளக்காதல் மலர்ந்துள்ளது.
இதனால் ரஞ்சு தனது காதலனை திருமணம் செய்ய முடிவு செய்த நிலையில் தனது கணவனை அவரது கள்ளக்காதலன் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி கள்ளக்காதலன் ஷாருக் மற்றும் அவரது நண்பர்களுடன் சேர்ந்து நேற்று முன்தினம் தூங்கிக் கொண்டிருந்த சந்திரசேகர் சௌகானை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். பின்னர் அந்த கொலையை மறைத்து தன்னுடைய கணவர் திடீரென இறந்து விட்டதாக கூறி காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தார்.
அந்த தகவலின் படி காவல்துறையினர் விசாரணை நடத்திய போது தன்னுடைய கணவர் நேற்று முன்தினம் வரை நலமாக இருந்ததாகவும், ஆனால் காலை 5 மணிக்கு எழுப்பும்போது இறந்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால் அவருடைய பேச்சில் காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் ரஞ்சுவின் செல்போனை ஆய்வு செய்தனர். அப்போது இரவு 1.30மணிக்கு மேல் சிலருடன் அவர் தொடர்பு கொண்டது தெரிய வந்தது.
பின்னர் அவரிடம் கிடுக்குபிடி விசாரணை நடத்தியதில் தன்னுடைய கள்ள காதலன் ஷாருக்குடன் சேர்ந்து தன் கணவனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதைத் தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் ரஞ்சு, ஷாருக்கானின் நண்பர்கள் சிவதாஸ் மற்றும் மொயினுத்தீன் லதீஃப்கான் ஆகியோரை கைது செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருக்கும் ஷாருக்கை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.