கர்நாடக மாநிலத்தில் மார்ச் 23-ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெற போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெங்களூரில் முக்கிய சேவைகள் பாதிக்க வாய்ப்பு உள்ளது.  பெலகாவியில் கன்னட மொழியில் பேசவில்லை என்ற காரணத்தால் KSRTC பஸ் கண்டக்டரை மராத்தி ஆதரவாளர்கள் தாக்கிய சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. போராட்டம் அறிவிக்கப்பட்டதால் பேருந்துகள் அதிகமாக இயங்காது. ஓலா-ஊபர் டிரைவர்கள் சங்கம் பந்திற்கு முழு ஆதரவு அளித்ததால் கேப் சேவைகள் கிடைக்காது.

ஆட்டோ சங்கத்தினர் பந்தில் பங்கேற்பதால், பெரும்பாலான ஆட்டோக்கள் இயங்காது. மார்ச் 23-ல் SSLC தேர்வுகள் இல்லை. ஆனால் தனியார் பள்ளிகள் அவர்களது முடிவுக்கு ஏற்ப செயல்படலாம். உணவகங்கள், கடைகள் சில மூடப்படலாம் அல்லது குறைந்த அளவிலேயே திறக்கப்படும்.. திரையரங்குகள் இயங்குமா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. போராட்டத்தால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படலாம். எனவே மக்கள் முன்கூட்டியே திட்டமிட்டு செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.