கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஸ்ரீகாந்த் மற்றும் பிந்து ஸ்ரீ தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் ஸ்ரீகாந்த் கம்ப்யூட்டர் இன்ஜினியராக இருக்கும் நிலையில் இவர்களுக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இதில் பிந்து ஸ்ரீ கடந்த ஒரு வருடமாக தன் கணவரை பிரித்து பெற்றோர் வீட்டில் வசித்து வரும் நிலையில் தற்போது அவருடைய கணவர் காவல் நிலையத்தில் ஒரு பரபரப்பு புகாரினை கொடுத்துள்ளார். அதாவது திருமணமான முதல் நாளிலிருந்து அவர்களுக்குள் தாம்பத்திய உறவு நடக்கவில்லையாம். ஒருவேளை ஸ்ரீகாந்த் தன் மனைவியின் அருகில் போனால் ஒருமுறை தொடுவதற்கு கூட 5000 ரூபாய் பணம் வேண்டும் என்கிறாராம்.

குழந்தை பெற்றுக் கொண்டால் தன்னுடைய அழகு கெட்டுப் போய்விடும் என்பதால் 60 வயதுக்கு மேல் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று பிந்து கூறுவதோடு ஒரு குழந்தையை வேண்டுமானால் தத்தெடுத்து வளர்க்கலாம் என்றும் கூறியுள்ளார். அதோடு ஒருமுறை அவர் வீட்டில் இருந்து வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது ஆபீஸ் மீட்டிங்கில் வீடியோ காலில் அவருடைய மனைவி திடீரென நடனமாடியதால் அவருடைய வேலையும் பறிபோனதாக அவர் வேதனையோடு கூறியுள்ளார். இதன் காரணமாக தன் மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்றுக் கொள்ளலாம் என்று நினைத்தபோது அதற்கும் 45 லட்ச ரூபாய் பணம் வேண்டும் என்று கேட்கிறார். அவரால் மிகுந்த மன வேதனைக்கு தான் ஆளாகியுள்ளதாகவும் அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசில் புகார் கொடுத்தார்.

ஆனால் இதனை பிந்து மறுத்ததோடு தன் கணவர் மீது அவரும் புகார் கொடுத்துள்ளார். அதாவது திருமணமான நாளிலிருந்து தன் கணவன் வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதாகவும் அதனால் ஒரு வருடமாக அவரை பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்து வருவதாகவும் இங்கு வந்து அடிக்கடி தொந்தரவு செய்வதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் தன் கணவரை நம்பி குழந்தை பெற்றுக் கொண்டால் என் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும் என்பதால் தான்  60 வயதுக்கு மேல் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று அவரிடம் கூறியதாகவும் எங்கள் வீட்டில் திருமணத்திற்காக செலவு செய்த பணத்தை மட்டும் தான் அவரிடம் கேட்டதாகவும் அவர் புகார் கொடுத்துள்ளார். இந்த இரண்டு புகார்கள் தொடர்பாகவும் போலீசார் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்