18 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆபாச வீடியோக்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்கின்றனர். இந்த குற்றங்கள் நாளுக்கு நாள் பன்மடங்காக அதிகரித்து உள்ளதாக நாடாளுமன்ற புள்ளி விபரங்களில் தெரியவந்துள்ளது.

அதாவது கடந்த 2023 ஆம் ஆண்டு 2957 குற்றங்கள் இது தொடர்பாக தேசிய சைபர் கிரைம் குற்ற ஆணைய காப்பகத்தில் பதிவாகி இருந்தது. இந்நிலையில் கடந்த 2024 ஆம் ஆண்டில் இது 6079 ஆக அதிகரித்துள்ளது. ஒரு ஆண்டில் கிட்டத்தட்ட 3122 குற்றங்கள் அதிகரித்துள்ளதாக நாடாளுமன்ற புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளது.