
மத்திய அரசின் PMIS அதிகாரப்பூர்வ போர்ட்டலில் PM இன்டர்ன்ஷிப் திட்டம் 2025 க்கான ஆன்லைன் பதிவு படிவத்தைத் திறந்துள்ளது. இதில் விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மாணவர்கள் pminternship.mca.gov.in ஐப் பார்வையிடலாம். வேலைவாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு சுமார் 500 முக்கிய நிறுவனங்களில் பயிற்சியோடு மாதம் 5000 ரூபாய் உதவி தொகை வழங்கப்படுகிறது. 12 மாத பயிற்சிக்கு பிறகு 6 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் 10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அல்லது இளங்கலை பட்டம், ஐடிஐ அல்லது பிற தொழில்நுட்ப டிப்ளோமா பெற்ற 21 முதல் 24 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பிரதான் மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இதில் விண்ணப்பிப்பதற்கு வரும் 31 ஆம் தேதியே கடைசியாகும். இதில் விண்ணப்பிப்பதற்கு கணினியை மட்டுமே மாணவர்கள் நம்பி இருந்தார்கள். இந்த நிலையில், இதை எளிதாக்கும் விதமாக வரும் 17 ஆம் தேதி புதிய செயலி ஒன்றை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிமுகம் செய்ய இருக்கிறார்.