தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நடைபெற்ற நிலையில் பட்ஜெட்டில் பல்வேறு விதமான அறிவிப்புகள் வெளியானது. ஆனால் பட்ஜெட்டில் எதிர்பார்த்த அறிவிப்புகள் இல்லை என்று எதிர் காட்சிகள் சரமாரியாக விமர்சித்து வருகிறது. அந்த வகையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயின் பட்ஜெட்டை விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, ஒன்பது இடங்களில் தொழிற்பேட்டைகள், பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 2000, 10 லட்சம் வரை உள்ள சொத்துக்களை பெண்கள் பெயரில் பதிவு செய்தால் சலுகை, ஈட்டிய விடுப்பு சரண் 15 நாட்கள் வரை போன்ற அறிவிப்புகளை நாங்கள் வரவேற்கிறோம். அதே சமயத்தில் இந்த அறிவிப்புகள் அமலாகுமா என்பது சந்தேகமாக இருக்கிறது.
இந்த விளம்பர மாடல் அரசின் கடந்த கால வெற்று அறிவிப்புகளே புதிய கலை கல்லூரிகள். ஆனால் கல்வியின் தரத்தை முன்னேற்ற என்ன செய்யப் போகிறார்கள் என்பதை சொல்லவில்லை. அடிப்படையான சாலை வசதிகளை கவனிக்காமல் அன்புச்சோலை போன்ற போலி அக்கறை காட்டுவது ஏன். இந்த விளம்பரம் மாடல் அரசின் மறைமுக முதலாளியாக இருக்கும் மத்திய பாஜக அரசின் பட்ஜெட்டில் டெல்லியில் இருந்து கொண்டு தமிழ்நாட்டை மறந்தார்கள். ஆனால் இந்த விளம்பரம் அரசோ தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழ்நாட்டு மக்களின் நலனையே மறந்து விட்டு பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளனர். இதுதான் இவர்கள் இருவரும் ஒரே மனநிலை கொண்ட உறவுக்காரர்கள் என்பதற்கு சாட்சி என்று பதிவிட்டுள்ளார். மேலும் கடந்த கால தேர்தல் வாக்குறுதிகள் பற்றியும் நடிகர் விஜய் பல கேள்விகளை எழுப்பி விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளார். இதோ அந்த அறிக்கை,
— TVK Vijay (@TVKVijayHQ) March 14, 2025
