கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூரில் காங்கண்ணா என்ற முன்னாள் மவுண்ட் டெட் போலீஸ் அதிகாரியின் மனைவி சுலோச்சனா. காங்கண்ணா மருத்துவ பிரச்சனையால் படுக்கையில் உள்ளார். இதனால் வீட்டின் செலவுகள் முழுவதையும் சுலோச்சனாவே நிர்வகித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் சுலோச்சனாவிற்கு நெருங்கிய தோழியாக இருந்தவர் சகுந்தலா. சுலோச்சனாவின் வீடு உள்ள அதே தெருவில் நான்கு வீடுகள் அடுத்து சகுந்தலாவின் வீடு உள்ளது. இருவருமே நெருக்கமான தோழிகள் ஒருவருக்கொருவர் நிதி பரிமாற்றம் செய்து கொள்வர் என்பது அப்பகுதியில் உள்ள அனைவருக்கும் தெரிந்த விஷயமாகும்.

இந்த நிலையில் கடந்த மார்ச் 5 அன்று மாலை 7 மணி அளவில் சகுந்தலா, சுலோச்சனாவை வீட்டிற்கு அழைத்துள்ளார். வழக்கம்போல தெருவில் உள்ள அனைவரிடமும் பேசியபடியே சுலோச்சனா சகுந்தலாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டிற்கு வந்த சுலோச்சனாவை சகுந்தலா படுக்கையில் தள்ளி தலையணை வைத்து அமுக்கி மூச்சு திணற வைத்து கொலை செய்துள்ளார். அதன் பின் அவரது கழுத்தில் இருந்த 50 கிராம் மதிப்புள்ள தங்கச் சங்கிலியை கழற்றி இரவு 9 மணிக்கு மேல் தெரேஷியன் கல்லூரி சர்க்கிலில் உள்ள துர்கா ஜூவல்லர்ஸ் என்ற கடையில் ரூபாய் 1.50 இலட்சத்திற்கு அடகு வைத்து உள்ளார். இந்தப் பணத்தில் தனது வீட்டு வாடகை ரூபாய் 36000 செலுத்திவிட்டு மீதமுள்ள ரூபாய் 1.14 லட்சத்தை வீட்டில் வைத்துள்ளார்.

இதனை அடுத்து சகுந்தலா சுலோச்சனாவின் மகன் ரவிச்சந்திராவுக்கு போன் செய்து உன்னுடைய அம்மா திடீரென மயங்கி விழுந்து விட்டார் என கூறியுள்ளார். இதனை அடுத்து ரவிச்சந்திரன் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சுலோச்சனாவை கொண்டு சென்றுள்ளார் ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இது இயல்பான மரணம் இல்லை என்பதை உறுதிப்படுத்திய மருத்துவர்கள் நாசர் பார்த்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து அப்பகுதியில் நடத்திய முதல் கட்ட விசாரணையில் சுலோச்சனாவும், சகுந்தலாவும் நெருங்கிய தோழிகள் இருவருக்கும் இடையே பண பரிமாற்றம் நடைபெறும் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து சகுந்தலா கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த விசாரணையின் போது சகுந்தலாத் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். வீட்டு வாடகை அதிக அளவில் இருந்ததால் செய்வது அறியாமல் தனது நெருங்கிய தோழியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதன் பின் சகுந்தலா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.