
பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலம் சூரத் நகரில் நடைபெற்ற ஒரு பொதுக்குழு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்ட நிலையில் ஒரு இளைஞர் திடீரென தேம்பி தேம்பி அழுதார். அதாவது அவர் பிரதமர் மோடி அவருடைய தாயாருடன் இருக்கும் போட்டோவை கையில் ஏந்தி அதனை மேலே தூக்கி காட்டினார்.
பின்னர் அவர் உணர்ச்சி வசப்பட்டு தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தார். இதனைப் பார்த்த பிரதமர் மோடி அவரை ஆறுதல் படுத்தியதோடு அவர் கையில் வைத்திருந்த புகைப்படத்தை வாங்கி ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்தார். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.
सूरत में पीएम मोदीने किया भावुक कलाकार का सम्मान।#Surat #SuratWelcomesModi #SuratNews #surties #PMnarendramodi #PMModiGujaratVisit #PMModiInGujarat #development #NarendraModi pic.twitter.com/ncWOnou0n6
— Sanskar Sojitra (@sanskar_sojitra) March 7, 2025