டெல்லி துவார்கா என்ற பகுதியில் உள்ள சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டது. இந்நிலையில் அந்த வழியாக கார் ஒன்று வந்துள்ளது. இதில் 2 பேர் பயணித்துள்ளனர். அப்போது அந்தக் கார் திடீரென அந்தப் பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்தது. இதையடுத்து அங்கிருந்த அப்பகுதி மக்கள் காரில் பயணித்த 2 பேரை பத்திரமாக மீட்டனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏ குலாப் சிங் யாதவ் கூறியதாவது, பொதுமக்கள் இன்னும் 5 ஆண்டுகளுக்கு இந்த நிலையை தாங்கிக்கொள்ள வேண்டியுள்ளது என்று பாஜகவை குற்றம் சாட்டியுள்ளார்.