திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மும்மொழிக் கொள்கை மூலமாக 3,5,8 ஆகிய வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு போல் ஒன்றை கொண்டு வருவது என்று திட்டமிடுகிறார்கள். தமிழ்நாட்டில் முன்மொழி கொள்கையை நாங்கள் ஏற்க மாட்டோம். மும்மொழிக் கொள்கை மாணவர்கள் இடையே அறிவாற்றல் சுமையை உருவாக்கும். இந்தி இல்லாமல் மூன்றாவது வேறு ஒரு மொழியை பயிற்றுவிக்க போதிய ஆசிரியர்கள் கிடையாது. பாடத்திட்டத்திற்கு வெளியே இந்தி மொழியை கற்றுக் கொள்ள நாங்களும் ஊக்குவிக்கிறோம்.
கட்டாயம் என்று சொல்லி ஒரு மொழியை கொண்டு வரும்போது தான் தேவையில்லாத மன அழுத்தத்தை மாணவர்களுக்கு கொடுக்கும். இந்தியாவில் 56 மொழிகள் இந்தி மொழியால் விழுங்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் சொந்த மொழியான ஒரியா மொழி உட்பட 56 மொழிகள் முழுமையாக இந்தி திணிப்பால் அளிக்கப்பட்டுள்ளது. அது போன்ற நிலை தமிழுக்கும் வந்து விடக்கூடாது. தமிழ்நாடு மாடலை பின்பற்ற வேண்டும் என்று சொல்வதற்கு பதில் நாங்கள் சொல்வதை நீங்கள் கேளுங்கள் என்ற சொல்லைத்தான் எதிர்க்கிறோம் என அன்பின் மகேஷ் அறிவித்துள்ளார்.
