மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆண்டு விழா நடந்து வருகிறது. இந்த விழாவில் அந்த கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உட்பட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த விழாவில் கமல்ஹாசன் பேசியதாவது, என்னை தோல்வி அடைந்த அரசியல்வாதி என்று பலரும் விமர்சிக்கிறார்கள். 20 ஆண்டுகளுக்கு முன்பே அரசியலுக்கு வர தவறியதை தான் என்னுடைய தோல்வியாக நான் பார்க்கிறேன்.
ஒருவேளை அப்படி வந்திருந்தால் நான் பேசும் இடமும் இருக்கும் இடமும் வேறாக இருந்திருக்கும். இந்த வருடம் மக்கள் நீதி மய்யத்தின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க போகிறது. அடுத்த வருடம் சட்டமன்றத்திலும் ஒலிக்கும். தமிழனுக்கு எந்த மொழி தேவை என்று தமிழனுக்கு தெரியாதா.? இதை தேர்வு செய்யும் அறிவு தமிழனுக்கு உண்டு இந்த விஷயத்தில் விளையாடாதீர்கள் என்று கூறினார்.
