தமிழ் சினிமாவில் முக்கிய ஹீரோயின்களில் ஒருவராக இருப்பவர் அஞ்சலி. இவருடைய திறமைக்காக ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அங்காடித்தெரு படத்தில் அருமையாக நடித்திருந்தார். தற்போது பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும், வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் ஷங்கரின் கேம் சேஞ்சர், மதகஜராஜா திரைப்படம் வெளியானது.
இந்நிலையில் அஞ்சலி குறித்து பேசிய செய்யாறு பாலு, “அங்காடித்தெரு படத்தில் நடிக்கும் போது அஞ்சலிக்கு மனரீதியாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவருடைய தங்கையும் உதயம் தியேட்டர் முன்புள்ள பிளாட்பாரத்தில் படுத்து தூங்குவது மற்றும் வீராணம் ஏரியில் ராட்சதக் குழாய்களில் தங்குவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இயக்குனரின் கட்டாயத்தில் பேரில் தான் அஞ்சலி இதையெல்லாம் நடித்து கொடுத்தார். இந்த படம் தொடங்குவதற்கு முன்பாக நான்கு மணி நேரம் ஒரு பெரிய ஜவுளி கடையில் நின்று பணிகளை செய்தார் அஞ்சலி” என்று கூறியுள்ளார்.
