
பாய்ஸ் படத்தில் நடிகராக அறிமுகம் ஆகி அதன்பிறகு இசையமைப்பாளராக கலக்கி வருபவர்தான் தமன். இவர் பாடகி ஸ்ரீவர்தினி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார். தெலுங்கு சினிமாவில் முன்னனி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வந்துகொண்டிருக்கிறார். இவர் தெலுங்கில் பாலகிருஷ்ணன் நடித்த அகண்டா, வீர சிம்மா ரெட்டி, பகவந்த் கேசரி, டாகு மகாராஜ் என தொடர்ந்து பாலகிருஷ்ணாவின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
இதனைத்தொடர்ந்து அண்மையில் அகண்டா 2 படத்திற்கும் இசையமைத்து வருகிறார். இதனால் தன்னுடைய படங்களுக்கு சூப்பரான இசையை கொடுத்தும் வரும் தமன்னை பாராட்டி பாலகிருஷ்ணா ஒரு போர்சே காரை பரிசாக வழங்கியுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.